சட்ட விதிகளை பின்பற்றி ஹூக்கா விற்பனை செய்யும் போது காவல்துறை தலையிட முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு

சட்ட விதிகளை பின்பற்றி ஹூக்கா விற்பனை செய்யும் போது காவல்துறையினர் தலையிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

Update: 2023-04-08 10:18 GMT

சென்னை,

சட்ட விதிகளை பின்பற்றி ஹூக்கா விற்பனை செய்யும் போது காவல்துறையினர் தலையிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. சென்னை தியாகராஜ நகரில் உணவகம் நடத்தி வரக்கூடிய மோகன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த மனுவில் அவர் தன்னுடைய உணவகத்தில் விதிகளை பின்பற்றி ஹூக்கா வழங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

ஹூக்கா புகைப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 21 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அதனை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதாகவும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருக்கிறார். விதிகளை முறையாக பின்பற்றி வரக்கூடிய சூழ்நிலையில் காவல்துறையினர் தங்களை தொந்தரவு செய்வதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்பதால் தான் காவல்துறையினர் தலையிட்டதாக காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி சந்திரசேகரன் விதிகளுக்கு உட்பட்டு ஹூக்கா சேவை வழங்கினால் அதில் காவல்துறை தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்திருக்கிறார். ஒருவேளை இந்த சட்ட விதிகளை மீறினால் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்