திட்டச்சேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், கட்டுமாவடி, சீயாத்தமங்கை, குத்தாலம், கோபுராஜபுரம், கொத்தமங்கலம், அகரகொந்தகை, ஆலத்தூர், பண்டாரவாடை, குருவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் திருட்டு, சாராய கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்கும் நோக்கில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.