தமிழ்நாட்டில் 3 நாள் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் 3 நாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார்.

Update: 2024-01-21 03:03 GMT

ராமேசுவரம்,

Live Updates
2024-01-21 08:09 GMT

தமிழ்நாட்டில் 3 நாள் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்தார். பயணத்தின் முதல்நாளில் சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பயணத்தின் 2வது நாளான நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதார் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து ராமேசுவரம் சென்ற பிரதமர் மோடி ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்.

இந்நிலையில், பயணத்தின் 3வது நாளான இன்று பிரதமர் மோடி ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர், தனுஷ்கோடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் 3 நாள் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

2024-01-21 06:29 GMT

மதுரை புறப்பட்டார் பிரதமர் மோடி...!

ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டார். மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து தனிவிமானம் மூலம் டெல்லி செல்கிறார். 

2024-01-21 05:46 GMT

கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்த பிரதமர் மோடி

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி சிறப்பு பூஜையும் செய்தார்.

2024-01-21 05:35 GMT

கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

2024-01-21 05:07 GMT

கடற்கரையில் வழிபாடு

அரிச்சல் முனை கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கடற்கரையில் மலர்களை தூவி வழிபாடு நடத்திய பிரதமர் மோடி சிறிது நேரம் தியானம் செய்தார்.

2024-01-21 05:02 GMT

அரிச்சல் முனையில் உள்ள புனித தூணிற்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை:

அரிச்சல் முனையில் உள்ள புனித தூணிற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

2024-01-21 04:55 GMT

தனுஷ்கோடி அரிச்சல் முனை சென்றடைந்தார் பிரதமர் மோடி

ரமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி தனுஷ்கோடி அரிச்சல் முனை சென்றடைந்தார்

2024-01-21 03:33 GMT

தனுஷ்கோடி புறப்பட்டார் பிரதமர் மோடி

ராமேசுவரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் இருந்து பிரதமர் மோடி தனுஷ்கோடி புறப்பட்டார். தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித நீராடுகிறார். பின்னர், அங்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார். தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் வழிபாடு செய்கிறார்.

2024-01-21 03:06 GMT

பயணத்தின் 3வது நாள்:

தமிழ்நாடு பயணத்தின் 3வது நாளான இன்று பிரதமர் மோடி தனுஷ்கோடி செல்கிறார். ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித நீராடுகிறார். பின்னர், அங்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார்.

தொடர்ந்து கோதண்டராமர் கோவிலுக்கு திரும்பி வழிபாடு செய்கிறார். பின்னர் ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

டெல்லி செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து அயோத்தி செல்கிறார். அயோத்தில் நாளை நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

2024-01-21 03:04 GMT

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை:-

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அவர் தீவிர விரதம் இருந்து வருகிறார்.

இதனிடையே, 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் தமிழ்நாடு வந்துள்ளார். அவர் நேற்று முன் தினம் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

பயணத்தின் 2வது நாள்: ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தில் வழிபாடு

பயணத்தில் 2வது நாளான நேற்று இந்து மத இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்துடன் தொடர்புடைய கோவில்களில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். அதன்படி, நேற்று பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து ராமேசுவரம் சென்ற பிரதமர் மோடி ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர், ராமகிருஷ்ண மடத்தில் இரவு பிரதமர் மோடி தங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்