உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து

குகேஷுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Update: 2024-12-12 19:15 GMT

சென்னை,

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன

இந்த நிலையில், குகேஷுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் குகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடின பயிற்சி, விடாமுயற்சி, தளராத தன்னம்பிக்கை ஆகிய மூன்றையே மூலதனமாக கொண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கும் தமிழக வீரர் குகேஷ் அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்