பயணத்தின் 3வது நாள்:தமிழ்நாடு பயணத்தின் 3வது நாளான... ... தமிழ்நாட்டில் 3 நாள் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
பயணத்தின் 3வது நாள்:
தமிழ்நாடு பயணத்தின் 3வது நாளான இன்று பிரதமர் மோடி தனுஷ்கோடி செல்கிறார். ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித நீராடுகிறார். பின்னர், அங்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார்.
தொடர்ந்து கோதண்டராமர் கோவிலுக்கு திரும்பி வழிபாடு செய்கிறார். பின்னர் ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
டெல்லி செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து அயோத்தி செல்கிறார். அயோத்தில் நாளை நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
Update: 2024-01-21 03:06 GMT