தமிழ்நாட்டில் 3 நாள் பயணம் நிறைவு: டெல்லி... ... தமிழ்நாட்டில் 3 நாள் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் 3 நாள் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்தார். பயணத்தின் முதல்நாளில் சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பயணத்தின் 2வது நாளான நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதார் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து ராமேசுவரம் சென்ற பிரதமர் மோடி ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்.
இந்நிலையில், பயணத்தின் 3வது நாளான இன்று பிரதமர் மோடி ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர், தனுஷ்கோடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றார்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் 3 நாள் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.