பிளஸ்-2 தேர்வில் 97.26 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் சிவகங்கை 6-வது இடம்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 97.26 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-ம் இடத்தை பெற்றுள்ளது.

Update: 2023-05-08 18:45 GMT


பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 97.26 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-ம் இடத்தை பெற்றுள்ளது.

6-வது இடம்

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 163 பள்ளிகளில் தேர்வு எழுதிய 15 ஆயிரத்து 802 மாணவ, மாணவிகளில் 15 ஆயிரத்து 369 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் இது 97.26 சதவீத தேர்ச்சி ஆகும். மேலும் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 6-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டும் பிளஸ்-2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் 6-வது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

100 சதவீத தேர்ச்சி

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 163 பள்ளிகளில் 76 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் அரசு பள்ளிகள் 22, முழு உதவி பெறும் பள்ளிகள் 5, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 9, மெட்ரிக் பள்ளிகள் 37, சுயநிதி பள்ளிகள் 3 என மொத்தம் 76 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்