கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்

கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-07-03 11:43 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம் பகுதிகளில் நாளை(ெசவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மின்கம்பங்களை மாற்றும் பணி

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதிக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

கோவில்பட்டி பகுதி

எனவே, கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நடராஜபுரம் 1 முதல் 9 வரையுள்ள தெருக்களுக்கும், படர்ந்த புளி, கங்கன் குளம், ஆலம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், சிட்கோ உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் மில் தெரு, புதுரோடு, பழனியாண்டவர் கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கும், விஜயாபுரி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் திருநகர், ராஜீவ் நகர், இ.பி காலனி, காமராஜ் நகர், மந்திதோப்பு ரோடு, குருமலை, வெங்கடாசலபுரம், கழுகாசலபுரம், மும்மலைப் பட்டி, பாறைப் பட்டி, புதூர் ஆகிய பகுதிகளுக்கும், எட்டையாபுரம் உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மீனாட்சிபுரம், படர்ந்த புளி, ஜி.கே. விநாயகா வித்யாலயா பள்ளி ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும்.

கழுகுமுலை பகுதி

இதேபோன்று எம். துரைசாமி புரம் உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நாலாட்டின்புத்தூர் பகுதிக்கும், கழுகுமலை உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பழங்கோட்டை, கூழைத் தேவன் பட்டி, வேலாயுதபுரம், வள்ளிநாயகபுரம் ஆகிய பகுதிகளுக்கும், கடம்பூர் உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் ஓனமாக்குளம், இளவேலங்கால் ஆகிய பகுதிகளுக்கும், பசுவந்தனை உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நாகம்பட்டி, சின்னங்குளம், குதிரை குளம் ஆகிய பகுதிகளுக்கும், எப்போதும் வென்றான் உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் குமரெட்டியாபுரம் பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்