பட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் மனு

சீர்காழியில் பட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் மனு;

Update:2023-10-10 00:15 IST

சீர்காழி:

சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் போதிய அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு என அரசு சார்பில் இடம் வாங்கியது. ஆனால் அந்த இடங்களுக்கான பட்டா இதுவரை இந்த கிறிஸ்தவருக்கு வழங்கப்படவில்லை எனவும் அதை வேறு மக்களுக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வருவதாகவும் அப்பகுதி கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அரசு சார்பில் ஏற்கனவே வாங்கப்பட்ட இடத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு பட்டா வழங்க கோரி அப்பகுதியை சேர்ந்த ஊர் தலைவர் அந்தோணிராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க கோரி தாசில்தார் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்