பெரம்பலூரை கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்-மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு

பெரம்பலூரை கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி கூறினார்.

Update: 2022-12-15 18:17 GMT

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், சர்வதேச நீதி பணிகள் சார்பில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மனித உரிமைகள், கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறையை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஏ.பல்கிஷ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டஉதவி மையம் மூலம் சட்டவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் சட்டவிழிப்புணர்வு அளித்து கொத்தடிமைகள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு உறுதி ஏற்க வேண்டும். மேலும் மாவட்ட போலீஸ்துறையும், அரசு சார்பற்ற அமைப்புகள், அரசு சாராத தொண்டு நிறுவனங்களும் இணைந்து விழிப்புணர்வு மேற்கொண்டு, குழந்தைகள் கடத்தலை முற்றிலும் தடுக்க பாடுபடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான அண்ணாமலை வரவேற்றார். இதில் உயர்நீதிமன்ற வக்கீல் பிரபு, சர்வதேச நீதி பணி ஊழியர்கள், மைக் ஆஸ்டின் மற்றும் சட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்