திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பேட்டரி வாகனங்களை இயக்காததால் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அவதி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பேட்டரி வாகனங்களை இயக்காததால் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அவதிப்பட நேர்ந்துள்ளது.

Update: 2022-09-09 18:46 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பேட்டரி வாகனங்களை இயக்காததால் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அவதிப்பட நேர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக வேலை நாட்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என பலர் வருகை தருகின்றனர்.

நடக்க முடியாத நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.

அவை பழுதடந்ததால் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. பழுதடைந்த வாகனங்களை எந்த துறை சார்பில் பழுது பார்ப்பது என்பது பெரிய குழப்பத்தில் அலுவலர்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்பெற்று வந்த பேட்டரி வாகனங்களை பழுதை நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்