தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்தாலும் மக்கள் பதற்றப்பட தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்தாலும் மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-21 08:56 GMT

சென்னை,


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி(XBB),பிஎ2(BA2) வகை வைரஸ் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் 2 மாதம் முன்பு தினசரி தொற்று 2 என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 70 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது. மக்கள் பதற்றப்பட தேவையில்லை. H3N2 காய்ச்சல் பாதிப்புக்கு தமிழ்நாட்டில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாரந்தோறும் 35 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து வருகிறோம். 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா 2ம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்