கணக்கெடுப்பில் முறைகேடு: ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு

குறிஞ்சிப்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-26 22:23 GMT

நெய்வேலி, 

குறிஞ்சிப்பாடி அருகே பெருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு அதேஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு பணியில் முறைகேடு நடப்பதாக கூறி கண்டன கோஷம் எழுப்பியபடி திடீரென ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அக்கிராம மக்கள் மகளிர் குழுவினர் மூலம் வறுமைக்கோட்டு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு பணியில் முறைகேடு நடந்துள்ளது. குறைவான நபர்களின் பெயர்கள் மட்டும் கணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆகவே சரியான முறையில் கணக்கெடுப்பு நடத்தி தகுதிவாய்ந்தவர்களுக்கு 100 நாள் திட்ட வேலை வழங்கவேண்டும் என்றனர். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்