பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-04-19 19:13 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் வினியோகம்

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியின் 14-வது வார்டை சேர்ந்த கட்டபொம்மன் நகரில் 17 தெருக்கள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படும் குடிநீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. பெண்களுக்கு பொது சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

போராட்டம்

எனவே பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் வெங்கட கோபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்