சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்?

சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2022-07-05 07:33 GMT

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற உத்தரவுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் சென்னையில் பெரும்பாலான மக்கள் முககவசம் அணியாமல் அலட்சியத்துடன் வெளியே சென்று வருகின்றனர். இந்தநிலையில் சென்னை மக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாவிட்டால் எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது தொடர்பாக இன்று மாலை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்