ஊட்டியில் அமைதி ஊர்வலம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஊட்டியில் அமைதி ஊர்வலம் நடந்தது.

Update: 2023-08-06 22:15 GMT

ஊட்டி

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சிறுபான்மையினர் நல அமைப்பு சார்பில் ஊட்டியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஏ.டி.சி. பகுதியில் நிறைவடைந்தது. இந்த அமைதி ஊர்வலத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்