மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள்... தரவுகளை வெளியிட்ட சென்னை மெட்ரோ நிறுவனம்

ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Update: 2023-05-02 17:08 GMT

சென்னை,

மெட்ரோவில் பயணம் செய்த பயணிகள் குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகள் பயணித்ததாக தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக ஏப்ரல் 28-ம் தேதியன்று 2 லட்சத்து 68 ஆயிரத்து 680 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 23 லட்சத்து 39 ஆயிரத்து 724 பயணிகளும், பயண அட்டைகளை பயன்படுத்தி 39 லட்சத்து 83 ஆயிரத்து119 பயணிகள் பயணித்தாக தெரிவித்துள்ளது.

டோக்கன்களை பயன்படுத்தி 3 லட்சத்து 56 ஆயிரத்து 489 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4 ஆயிரத்து 136 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி ஆயிரத்து 964 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்