எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-03-25 10:41 IST
எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்

புதுடெல்லி,

அதிமுக பொதுச்செயலாளர் திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் கூட்டணி தொடர்பானதாக இருக்கலாமோ என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் ஏற்படலாம் என்ற பேச்சு சமீப காலமாக அதிகரித்து இருக்க கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளது கவனிக்கத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்