தமிழகத்தின் 9 இடங்களில் சதமடித்த வெயில்

அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி வெயில் பதிவானது.;

Update:2025-03-29 03:48 IST
தமிழகத்தின் 9 இடங்களில் சதமடித்த வெயில்

சென்னை,

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 105.62 டிகிரி வெயில் பதிவானது. நேற்று 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவான இடங்கள் வருமாரு:-

வேலூர்- 105.62 டிகிரி (40.9 செல்சியஸ்), சேலம்- 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்), கரூர்- 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்), ஈரோடு- 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), மதுரை விமான நிலையம்- 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்), திருச்சி- 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), திருத்தணி- 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்), திருப்பத்தூர்- 100.4 டிகிரி (38 செல்சியஸ்), தர்மபுரி- 100.4 டிகிரி (38 செல்சியஸ்). 

Tags:    

மேலும் செய்திகள்