கோடநாடு வழக்கில் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

கோடநாடு வழக்கில் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.;

Update:2025-03-25 09:52 IST
கோடநாடு வழக்கில் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

சென்னை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், கோடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தனிப்படை முன்பு வரும் 27-ம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்