நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை

நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-05-29 18:30 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் ரோவர் வளைவு அருகேயும், பெரம்பலூர்-துறையூர் சாலையில் கடைவீதியிலும் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் அப்பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பஸ்சுக்காக வெயிலில் நீண்டநேரம் காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்