ராமநாதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

ராமநாதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2023-04-05 13:49 GMT

கண்ணமங்கலம்

ராமநாதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்தது.

கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில் சார்பில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வீரகோவில் மைதானத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதைமுன்னிட்டு பக்தர்கள் சார்பில் கண்ணமங்கலம் வரசித்தி வினாயகர் கோயிலிலிருந்து மேளதாளத்துடன் திருமண சீர்வரிசை ஊர்வலமாக மணப்பந்தலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராமநாதீஸ்வரர் பர்வதவர்த்தினி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

பக்தர்கள் சாமிக்கு திருமண மொய் எழுதினர். பின்னர் திருமண விருந்து வழங்கப்பட்டது. பிற்பகலில் பஞ்சமூர்த்திகளுடன் சாமி அம்மன் திருமணக்கோலத்தில் வீதி உலா நடைபெற்றது.

இதேபோல் கண்ணமங்கலம் அடுத்த கம்மவான்பேட்டை மொட்டை மலையில் அமைந்துள்ள சக்திவேல் முருகன் கோவிலிலும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்