கிராமசபை கூட்டத்தை பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் புறக்கணிப்பு

ஆலங்குளம் அருகே கிராமசபை கூட்டத்தை பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

Update: 2023-05-01 21:03 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே கிராமசபை கூட்டத்தை பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

கலெக்டர் பங்கேற்பு

மே தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டத்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆலங்குளம் யூனியனில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

வாடியூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் பங்கேற்றார்.

சிவலார்குளம்

இந்தநிலையில் ஆலங்குளம் அருகே சிவலார்குளம் பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டத்தை நடத்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயகணபதி சென்றபோது, அங்கு பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. பொதுமக்களும் ஒரு சிலரே வந்தனர்.

இதனை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவரின் வீட்டிற்கு நேரில் சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர், கூட்டத்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பஞ்சாயத்து தலைவர், கடந்த கிராமசபை கூட்டம் முடிந்தபோது தன்னையும், தனது கணவரையும் சிலர் தாக்க முயன்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால்தான் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என கூறினார்.

இதனை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாமல் அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கிராமசபை கூட்டம் நடந்தது. இதிலும் குறைவான பொதுமக்களே கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்