பாமாயில் விலை குறைந்தது

விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்து காணப்பட்டது.

Update: 2022-08-21 19:06 GMT

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.8,300 முதல் ரூ.9,000 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.200 விலை குறைந்து ரூ.12,200 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,800 ஆகவும் விற்பனை ஆனது.

முண்டு வத்தல்

பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.9,000 ஆகவும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,500 வரையிலும் விற்பனையானது.

துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.300 விலை குறைந்து ரூ.10,400 முதல் 11 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.5,200 முதல் ரூ.5,300 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.4,900 முதல் ரூ.5,200 வரை விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

பாமாயில்

கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.50 விலை குறைந்து ரூ.2,900 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.50 விலை குறைந்து ரூ.5,115 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.80 விலை குறைந்து ரூ.1,960 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.

நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.300 விலை குறைந்து ரூ.4,300 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,400 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.40 அதிகரித்து ரூ.3,880 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,500 ஆகவும் விற்பனை ஆனது.

பொரிகடலை

பொரிகடலை 50 கிலோ ரூ.4,100 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,100 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,560 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,050 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1,280 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.830 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,800 ஆகவும் பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனையானது.

மசூர் பருப்பு ரூ.10,700 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனையானது.


Tags:    

மேலும் செய்திகள்