பழனி முருகன் கோவில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரத்தில் பழனி முருகன் கோவில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2023-01-29 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் பழனி முருகன் பாதயாத்திரை குழு சார்பாக பழனி மலை முருகன் கோவிலுக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் ஏற்பாட்டில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த பஜனை நிகழ்ச்சியின் போது பக்தர்களுக்கு பாரத மாதா படங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தென்மலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, ஆசிரியர் கிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன் தங்கராஜ் மற்றும் ஊர் நாட்டாமைகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்