கொள்முதல் நிலையங்களில் கிடக்கும் நெல் மூட்டைகள்

லாாிகள் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விரைவில் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனா்.

Update: 2023-02-21 22:10 GMT

மெலட்டூர்;

லாாிகள் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விரைவில் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனா்.

கொள்முதல் நிலையங்கள்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, வையச்சேரி, தேவராயன்பேட்டை அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த வாரங்களாக செயல்பட தொடங்கி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை குடோனுக்கு எடுத்து செல்ல தினசரி லாரிகள் சரிவர இயக்கப்படவில்லை.இதனால் வையச்சேரி கொள்முதல் நிலையத்தில் மட்டும் 4 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் இருப்பு உள்ளது. இதைப்போல தேவராயன்பேட்டை-1 கொள்முதல் நிலையத்தில் சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வெட்ட வெளியில் பாதுகாப்பு இன்றி கொட்டும் பனியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இடம் நெருக்கடியாக உள்ளதாகவும், அதன் காரணமாக தொடர்ந்து நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நெல் மூட்டைகள் தேக்கம்

நெல்மூட்டைகள் தேக்கம் குறித்து விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் கூறியதாவதுஅரசு கொள்முதல் நிலையங்களில் தினசரி நாள் ஒன்றுக்கு சராசரியாக 900 முதல் 1000 மூட்டைகள் வரை கொள்முதல்செய்யப்படுகிறது. தினமும் 2 லாரிகள் வந்தால்தான் கொள்முதல் செய்யக்கூடிய மூட்டைகளை தேக்கமின்றி எடுத்து செல்லமுடியும். ஆனால் லாரிகள் சரிவர இயக்கப்படாததால் நெல்மூட்டைகள் தேக்கமடைந்து வருகிறது. தேவராயன்பேட்டை கொள்முதல்நிலையத்தில் 5 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் வெட்ட வெளியில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகளிடம் இருந்து தொடர்ந்து கொள்முதல் செய்யக்கூடிய நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் வைப்பதற்கு இடமின்றி வெட்ட வெளியில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதைப்போல வையச்சேரி அரசு கொள்முதல்நிலையத்தில் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை தேக்கமடைந்துள்ளது. எனவே நெல் மூட்டைகளை எடுத்து செல்ல நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். 

Tags:    

மேலும் செய்திகள்