அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு: ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதால் அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-06-20 22:42 GMT

சென்னை,

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் அக்னிபத் திட்டத்துக்கு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ஜனநாயக ரீதியாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் போராட்டம் வலுத்து வருவதால், தமிழகத்தில் ரெயில் மறியலுக்காக ரெயில் நிலையங்களுக்கு யாரும் செல்ல முடியாதபடி சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, நெல்லை, திருச்சி, தஞ்சை, சேலம், திருப்பூர், உள்ளிட்ட ரெயில் நிலையங்களில், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு போலீசார், ஆயுதப்படை போலீசார், லோக்கல் போலீசார், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ரெயில் நிலையத்தில் ரெயில் ஏற வரும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்