கோத்தகிரி-ஊட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்
சிறுத்தை நடமாட்டத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலை பிரதான மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையை உள்ளூர் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் இந்த சாலையை பேரார் கிராமத்திற்கு அருகே சிறுத்தை ஒன்று கடந்து சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இந்த காட்சியை காரில் சென்ற சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோத்தகிரி - ஊட்டி இடையே சாலையை சிறுத்தை கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அவ்வழியாக பயணித்து வருகின்றனர்.