கம்பத்தில் மரத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலையால் விபத்து அபாயம்
கம்பத்தில் மரத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கம்பம் கோசந்திர ஓடையில் இருந்து லோயர்கேம்ப் வரை உள்ள சாலையில் அதிக விபத்து ஏற்படும் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து மையப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கம்பம் கோசந்திர ஓடை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து 450 மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தப்பட்டது.
ஆனால் சாலையோர மரங்களை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் போதிய இடைவெளி இல்லாததால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன் சாலையில் உள்ள மரத்தை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.