தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி 6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடந்தது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி 6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடந்தது. கட்டுரை போட்டியில் 60 பேரும், பேச்சுப்போட்டியில் 55 பேரும் பங்கேற்றனர். கட்டுரை போட்டியில் ஸ்ரீரெங்கபுரம் எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி அஸ்விதா முதலிடமும், ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மோகன்பாபு 2-வது இடமும், சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 3-வது இடமும் பிடித்தனர்.
பேச்சுப்போட்டியில் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி முதலிடமும், ஜி.கல்லுப்பட்டி புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி மாணவி அப்ராபானு 2-வது இடமும், வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரூபிகா 3-வது இடமும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.