ஓணம் பண்டிகையையொட்டி தமிழக-கேரள எல்லையில் போலீசார் வாகன சோதனை

ஓணம் பண்டிகையையொட்டி தமிழக- கேரள எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-06 16:16 GMT

கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில் பண்டிகையையொட்டி தேனி மாவட்டம் கூடலூர், குமுளி வழியாக கேரளாவிற்கு மதுபானம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடத்தல் சம்பவங்களை தடுக்க மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய சோதனை சாவடிகளில் தலா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர் அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களில் உணவு பொருட்கள் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்