இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாவதாரம்.

Update: 2024-04-25 01:48 GMT

 இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் சித்திரை மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை. பிரதமை திதி காலை (6.53)க்கு மேல் துவிதியை. விசாகம் நட்சத்திரம் இரவு (2.08)க்கு மேல் அனுஷம் நட்சத்திரம். சித்தயோகம். கீழ்நோக்கு நாள்

நல்ல நேரம்: காலை- 10.30-11.30, மாலை: 5.00-6.00

ராகுகாலம்: மதியம்: 1.30-3.00

எமகண்டம்: காலை; 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

வாரசூலை: தெற்கு

சூரிய உதயம்: 6.10

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,7

ராசிபலன்

மேஷம்

வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும் நாள். விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள், உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

ரிஷபம்

தொழில் போட்டிகள் அகலும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள்.

மிதுனம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நடைபெறும். நண்பர்களுடன் பயணம் உண்டு, உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம்.

கடகம்

விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும், ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்.

சிம்மம்

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும்.  பேச்சில்   கனிவு பிறக்கும். நாள். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசுவழி வேலை அமைய எடுத்த முயற்சி கைகூடும்.

கன்னி

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. முக்கிய புள்ளிகளின்  சந்திப்பால் முன்னேற்றம் ஏற்படும். 

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். சிலரின் அன்புக் கட்டளைகளுக்கு ஆட்பட நேரிடும்.

விருச்சிகம்

பரபரப்பாகச் செயல்பட்டுப் பாராட்டு மழையில் நனையும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். ஊதிய உயர்வு உத்தியோக உயர்வு பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.

தனுசு

நட்பு வட்டம் விரிவடையும் நாள். கடனாகக் கொடுத்த தொகை வசூலாகும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும்.

மகரம்

யோகமான நாள். உறவினர் பகை அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுக்கல். வாங்கல்கள் ஒழுங்காகும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

கும்பம்

மனக்குழப்பம் அகலும் நாள்.இல்லம். தேடி  நல்ல தகவல் வந்து சேரும்.  தொழிலில் புதிய முதலீடுகள் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்டபிரச்சினை இன்று அகலும். 

மீனம்

 எவ்வளவு வந்தாலும் உடனுக்குடன் விரயம் ஆகலாம். எந்த முடிவாக இருந்தாலும் சிந்தித்து  செய்வது நல்லது. சந்திப்பால் முன்னேற்றம் ஏற்படும்

 ******

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாவதாரம் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சென்னை ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும் இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன சேவை.ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

Tags:    

மேலும் செய்திகள்