பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதலை கண்டித்து 28-ந் தேதி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்-ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதலை கண்டித்து 28-ந் தேதி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

Update: 2023-03-18 18:45 GMT


பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதலை கண்டித்து 28-ந் தேதி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப் ரோஸ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாய தைனேஸ், சிங்கராயர், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஜோசப், ரமேஷ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜான் அந்தோணி, அமலசேவியர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரசு உதவி பெறும் பள்ளி

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளில் சேர தமிழ்நாடு அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதை போல அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரி படிப்பில் சேரும் மாணவிகளுக்கு அரசு மாதந்தோறும் வழங்கும் உயர் கல்விக்கான ஊக்கத்தொகை ரூ.1000 அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள காலை சிற்றுண்டி திட்டம் ஏழை குழந்தைகளின் நலன் கருதி அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வருகிற 22-ந் ேததி திருச்சி-செயிண்ட் ஜோசப் கல்லூரியில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது.

ஆர்ப்பாட்டம்

விதிகளுக்கு முரணாக இளையான்குடி ஒன்றியத்தில் இருந்து காளையார்கோவில் ஒன்றியத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி 28-ந் தேதி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற உள்ள வட்டார அளவிலான மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக பங்கேற்பது., ஏப்ரல் 15 மற்றும் 16-ந் தேதிகளில் வட்டார நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் நடத்துவது. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் இணையதள செயலியை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்