ரெயில் பெட்டி எரிந்ததில் சதிச்செயல் இல்ைல- கூடுதல் டி.ஜி.பி. வனிதா தகவல்

ரெயில் பெட்டி எரிந்ததில் சதிச்செயல் இல்லை என்று கூடுதல் டி.ஜி.பி. வனிதா தெரிவித்தார்.

Update: 2023-08-26 20:36 GMT


தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.வனிதா மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் ரெயில் பெட்டி தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக மதுரை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 174-ன் கீழ் (தீ விபத்து) மட்டும் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடம் மற்றும் ரெயில் பெட்டியில் தடயங்களை சேகரித்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நடந்த சம்பவம் விபத்து என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த சதிச்செயலும், யாருக்கும் தொடர்போ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. கியாஸ் சிலிண்டர், கரிக்கட்டைகள், விறகு ஆகியன சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் டூரிஸ்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்களின் அறிக்கையின் படி டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்த போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வர்த்தக சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தூரமாக நிறுத்தப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இறந்த நபர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரேயொரு நபரை மட்டும் அடையாளம் காண முடியாமல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்