நீலகிரி: மசினகுடியில் இருந்து வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதை செல்ல தடை

மசினகுடியில் இருந்து வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-05 09:51 GMT

ஊட்டி,

ஊட்டி-கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதையில் மிகவும் செங்குத்தான வளைவுகள் இருப்பதால் தொடர் விபத்துகள் நடந்து வந்தன. இதனால் ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் மற்றும் வெளிமாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்தனர். இவர்கள் ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு சுற்றுலா வேனில் ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்றனர். இந்த சுற்றுலா வேன் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் வயது 45 மதிக்கத்தக்க பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சுற்றுல்லா வேன் விபத்தையடுத்து மசினகுடியில் இருந்து வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதைக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் மசினகுடி வழியாக கல்லட்டி பாதையில் உதகையை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்