கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. மனு தாக்கல்

கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Update: 2023-11-21 11:34 GMT

சென்னை, 

கிண்டியில் கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். 

இந்த நிலையில் ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், ரவுடி கருக்கா வினோத் மீது கடந்த 14-ம் தேதி கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில், தற்போது கருக்கா வினோத்தை 7 நாட்கள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. மனு தாக்கல் செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்