செய்திகள் சில வரிகளில்......
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.;
சென்னனை,
* பிரதமர் மோடி சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி வந்தடைந்தார்.
* முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
* கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
* சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
* ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வெளியிடுகிறார்.
* அரசு பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* கென்யாவில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
* அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
* கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.