செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.;

Update:2024-09-05 14:01 IST

சென்னை,

* சிங்கப்பூர் பிரதமரை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்..

* வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் 2 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

* தெலுங்கானாவில் போலீஸ் நடத்திய என்கவுண்ட்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

* டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் கையெழுத்தானது.

* மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

* பாரா ஒலிம்பிக் தொடரில் ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கள் வென்று இந்தியா அசத்தியுள்ளது.

* கர்நாடகா முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது.

* காசா போரை கண்டித்து டென்மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்ட 'கிரேட்டா தன்பெர்க்' கைது செய்யப்பட்டுள்ளார்.

* பாரா ஒலிம்பிக் போட்டியில் 5-வது தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியா பதக்கப்பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

* திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பும், பாராட்டும் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்