செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-09-02 12:35 GMT

சென்னை,

 * சாதிவாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

* பா.ஜ.க. உத்தரவின்பேரில் வாக்கு எண்ணும் தேதி மாற்றப்பட்டுள்ளது என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

* தனியார் வங்கியிடம் சம்பளமாக ரூ.16 கோடி பணம் வாங்கியதாக செபி தலைவர் மாதவி புரி புச் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

* வயநாட்டில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் ஒரு மாதத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

* செங்கடலில் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

* சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்வு கட்டாயம் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

* அரியானாவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்.

* ஒலிம்பிக், காமன் வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றால் நேரடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

* பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

* தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பற்றி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்