செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-07-15 10:32 GMT

சென்னை,

*பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையடுத்து தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

* அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார். இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* 4 நியமன எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனால் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் குறைந்தது.

* டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்

* கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி 16-வது முறையாக அர்ஜென்டினா சாம்பியன்

* கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னை கொல்வதற்கு முயற்சி நடந்துள்ளது என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக ஸ்பெயின் அணி சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.

* அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு; சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்