செய்திகள் சில வரிகளில்......
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.
சென்னை,
* விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
* விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
* ரஷிய பயணத்தை முடித்த பிரதமர் மோடி ஆஸ்திரியா சென்றடைந்தார்.
* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பிரான்சை வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
* என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
* கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
* ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் பால் லாரி மீது, டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
* ரஷியாவுடனான இந்திய உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் - அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
* வேளாண் பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கு நடந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
* பழங்குடியினர் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு.. கர்நாடக காங். எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.