ரூ.3 லட்சத்தில் புதிய சோலார் உலர் களம்

ஆனைமலையில் ரூ.3 லட்சத்தில் புதிய சோலார் உலர் களம் அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-15 19:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தேங்காய் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் விவசாயிகள் கொப்பரை உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்காக, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள உலர் களங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3 லட்சம் செலவில் புதிதாக நவீன பிளாஸ்டிக் கூடார சோலார் உலர் களம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மழைக்காலங்களில் கூட கொப்பரையை உலர வைக்கலாம். அதில் வெப்பநிலை மற்றும் ஈரப்பத கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. ஒரே சமயத்தில் 20 மூட்டைகள் வரை கொப்பரையை உலர்த்தலாம். மேலும் அங்கு 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கொப்பரை இருப்பு கிடங்கு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது என்று ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்