பா.ம.க. பொதுக்கூட்டத்தில் ரகளை - நெல்லையில் பரபரப்பு..!
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்கூட்டத்தில் ரகளை ஏற்பட்டது.;
நெல்லை,
பாட்டாளி மக்கள் கட்சியின் 'பா.ம.க. 2.0' விளக்க பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று நடந்தது. இங்கு பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இக்கூட்டத்தில், பேசிய பா.ம.க. நிர்வாகிகள் காவல் துறையினரை விமர்சித்ததாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஹரிஹரன், காவல் துறையினரை அவமரியாதையாக பேச வேண்டாமென கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர், அவரை சுற்றி நின்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து, அங்கிருந்த மற்ற காவலர்கள் அவரை அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதற்கு முன்னர் பா.ம.க. சார்பில் என்.எல்.சி.க்கு எதிராக நடைபெற்ற முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது குறிப்பிடதக்கது.