நீட் தேர்வு முறைகேடு- தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்

நீட் முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-06-11 07:26 GMT

சென்னை,

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபடி, மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தும் போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

அதேபோல, நீட் தேர்வு குளறுபடியை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடலூரில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, நீட் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்று இருப்பதாகவும் மறு தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்