தாளவாடி அருகேகிராமத்துக்குள் புகுந்த 2 காட்டு யானைகள்பொதுமக்கள் அச்சம்
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த 2 காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் வெளியேறி அருகில் உள்ள திகனாரை கிராமத்துக்குள் புகுந்தது. காலையில் யானையை கண்டதும், அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனே அவர்கள் ஒன்று திரண்டு 2 யானைகளையும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 30 நிமிட போராட்டத்துக்கு பின்னா் 2 காட்டு யானைகளும் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.