நவராத்திரி திருவிழாவில் 2-ம் நாளான நேற்று மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் கல்யாண சுந்தரவல்லி தாயார், கூடலழகர் பெருமாள் கோவில் மதுரவல்லி தாயார், தெற்குமாசி வீதி வீரராகவ பெருமாள் கோவில் தாயார், இன்மையில் நன்மை தருவார் கோவிலில் மத்தியபுரி அம்மன், தருமி, எல்லீஸ்நகர் தேவி கருமாரியம்மன், ெரயில்வே காலனி முத்துலட்சுமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.