செயற்கையை தவிர்த்து உடலுக்கு நலம் தரும் இயற்கையை நாடலாமே!

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் உடல்சோர்வு அடைகின்றனர். நாகரீக காலத்தில் எத்தனை குளிர்பானங்கள் இருந்தாலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பான வகைகளுக்கு நிகர் ஏதும் உண்டா என்ன?

Update: 2023-02-17 18:32 GMT

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் உடல்சோர்வு அடைகின்றனர். நாகரீக காலத்தில் எத்தனை குளிர்பானங்கள் இருந்தாலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பான வகைகளுக்கு நிகர் ஏதும் உண்டா என்ன?

இயற்கை பொருட்கள்

பொதுவாக கோடை கால சீசனில் இயற்கை பான வகைகளில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக தண்ணீர் சத்து நிறைந்த இந்த பழம் இனிப்பு சுவையுடன் உடலுக்கு குளிர்ச்சிையயும், தேவையான நீா்ச்சத்தையும் தருகிறது. இதேபோல் வருடம் முழுவதும் கிடைக்கும் இளநீர் உடல்சூட்டை குறைத்து, நீர்ச்சத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் இயற்கை 'ஐஸ்' என்று மக்களால் அழைக்கப்படும் நுங்கு, பதநீர் ஆகியவை அதிக மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.

இவற்றை பருகுவதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. பசியைத் தூண்டுதல், உடல் எடையை குறைத்தல் போன்ற பலன்களும் இதன் மூலம் கிடைக்கிறது. இந்த வரிசையில் கோடைக்கு இதமாக மோர், கம்பங்கூழ், கரும்புச்சாறு போன்றவையும் வெயிலுக்கு இதமாக இருப்பதுடன் நல்ல பலனை தருகின்றன.

செயற்கை பானங்கள்

மருத்துவ குணங்கள் மிகுந்த இத்தகைய இயற்கை பானங்களை பயன்படுத்துபவர்கள் பலர் இருந்தாலும் தற்போதைய நவீன காலத்தில் செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கண்முன்னே கிடைக்கும் இயற்கை பொருட்களை தவிர்த்து அதன் பெயரில் போலியாக தயாரிக்கப்படும் செயற்கை குளிர்பானங்களை வாங்குகின்றனர்.

திருப்பூரில் திரும்பும் இடமெல்லாம் பேக்கரி, சாலையோர கடைகளில் குளிர்பான விற்பனை நடப்பதே இதற்கு சாட்சி. இதில் பலர் நியாயமாக நடந்து கொள்ளும் நிலையில் ஒரு சிலர் மட்டும் தர்பூசணி ஜூஸ், இளநீா் சர்பத் என்று கூறி சுவையூட்டியை கலந்து மக்களை ஏமாற்றுகின்றனர். இதை அறியாமல் வாங்கி பருகும் மக்கள், வாந்தி, வயிற்றுபோக்குடன் பல்வேறு நோய்களை தேடிக்கொள்கின்றனர்.

விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு

இந்த கோடை கால வியாபாரத்தை நம்பி பல விவசாயிகள் கடுமையாக உழைத்து இயற்கை பானங்களுக்கானவற்றை விளைவிக்கின்றனர், இதேபோல் வியாபாரிகளும் வியாபாரத்தை எதிர்பார்த்து கால்கடுக்க காத்து நிற்கின்றனர். ஆனால் மக்கள் செயற்கை பான வகைகளை தேடிச்செல்வதால் வியாபாரிகளும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ருசியை பார்க்காமல், உடலுக்கு நலம் தரும் பக்க விளைவற்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்வதே நல்லது என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்