தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-01-25 19:11 GMT

பொன்னமராவதி காந்தி சிலை முன்பு வருவாய்த்துறை சார்பில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பிரசாரம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து, துணை தாசில்தார் சேகர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் தாசில்தார் வில்லியம் மோசஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், துணை தாசில்தார்கள், கிராம உதவியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற பதாகைகளை கையில் பிடித்தவாறு ஆவுடையார்கோவில், அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பஸ் நிறுத்தம், காமராஜர் சிலை பஸ் நிறுத்தம், வடகாடு முக்கம், சந்தைப்பேட்டை வழியாக வந்து மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்