தேசிய தலித் கிறிஸ்தவர்கள் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

தேசிய தலித் கிறிஸ்தவர்கள் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-08-10 20:04 GMT

ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர்கள் பேரவை சார்பில் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பேரவையின் மாநில பொதுச்செயலாளர் ஜான்சன் துரை தலைமை தாங்கினார். திருச்சி-தஞ்சை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர்சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். சி.எஸ்.ஐ. திருச்சி மறைமாவட்ட தலைவர் ராஜமான்சிங் வரவேற்று பேசினார். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோஇருதயராஜ் சிறப்புரையாற்றினார். பேரவையின் தேசிய பொதுச்செயலாளர் சார்லஸ், ஆலோசகர் பிராங்க்ளின் சீசர்தாமஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முடிவில் மாநில பொருளாளர் சேனவராயன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து திருச்சபைகளின் பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்