நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார்

நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் கொடுத்தனர்.

Update: 2023-09-02 18:43 GMT

புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாநில பொறுப்பாளர் ராஜாராம் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தன் பெயரில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொய் குற்றச்சாட்டுகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், மத நல்லிணக்கத்தை சீர்கெடுக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும், சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருடன் உள்ள வீரலட்சுமி ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், என தெரிவித்திருந்தனர். மனுவை போலீஸ் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்